ஏரல் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) ஜுன் 11-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இது தொடர்காவ ஆட்சியர் கோ. லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டத்தில் 1433-ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) ஜுன் 11-ஆம் தேதி தொடங்கப் பெற்று ஜுன் 20-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி நாட்களில் வருவாய் தீர்வாயம் நடைபெறும் கிராமத்திற்குரிய பொதுமக்கள் அந்தந்த நாட்களில் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை வழங்கி தீர்வு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.