தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து அவரவருக்குரிய தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்களின் முழு விவரங்களுடன், தேர்வு மையத்தின் பெயரும், முகவரியும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில், சாத்தான்குளம் வட்டத்தில் S. S. N. Government Model Higher secondary School (சு. சந்தோச நாடார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி) ல் அமைந்துள்ள தேர்வு மையத்தின் எண். 009 தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் மட்டும் 1-83 Ave Maria Park Pannamparai Junction Satankulam (TK), Thoothukudi District என தவறுதலாக பதிவாகி உள்ளது.
மேற்படி தேர்வு மையம் S. S. N. Government Model Higher secondary School (சு. சந்தோச நாடார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி) ஆனது தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், கொம்படிக்கோட்டை கிராமம், உடன்குடி - திசையன்விளை மெயின்ரோட்டில் அமைந்துள்ளது. தேர்வு மையம் எண்: 009 இல் தேர்வு எழுத அனுமதிச் சீட்டு பெற்ற தேர்வர்கள் மேற்படி முகவரியில் அமைந்துள்ள தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.