தூத்துக்குடி: ஆறாம்பண்ணை முஹைதீன் பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்வு

76பார்த்தது
தூத்துக்குடி: ஆறாம்பண்ணை முஹைதீன் பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்வு
ஆறாம்பண்ணை முஹைதீன் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட ஆறாம்பண்ணை முஹைதீன் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கான புதிய நிர்வாக கமிட்டி தேர்தல் உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் உத்தரவின்படி பண்ணை மஹாலில் நடைபெற்றது. 

தேர்தலில் இரண்டு அணிகள் போட்டியிட்ட நிலையில், தமிழக வக்பு வாரியத்தின் 10 பேர் கொண்ட குழுவினர் தேர்தலை நடத்தினர். தேர்தல் முடிவில், புதிய தலைவராக அபுஷாலி, செயலாளராக அப்துல்ரசாக், பொருளாளராக அக்பர், துணைத்தலைவராக அப்துல் வாஹித், துணைச்செயலாளராக அய்யூப், ஒருங்கிணைப்பாளராக முஹம்மது, கமிட்டி உறுப்பினர்களாக முஹம்மது உசேன், சாகுல் ஹமீது, அப்துல் பாயிஸ், அப்துல்கரீம், முகமதுகாலித், முஹம்மதுகாசிம், அபுல்காசிம், அப்துல்கரீம் ஆகியோரும், ஆலோசகர்களாக சாகுல், ஹமீது மகபூப், அலி, இலியாஸ், ஹனிபா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். 

இதுகுறித்து செயலாளர் அப்துல் ரசாக் கூறியதாவது, புதிய நிர்வாகிகள் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் கமிட்டி சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். புதிய நிர்வாகிகள் வரும் 3ம் தேதி பதவி ஏற்கும் விழாவில், அனைவரும் தவறாமல் பங்கேற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி