சாத்தான்குளத்தில் தூத்துக்குடி கோட்ட கலால் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. சாத்தான்குளம் டிஏன்டிடிஏ ஆர்எம்பி புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி கோட்ட கலால் அலுவலர் தங்கையா பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரி, தூய இருதய மேல்நிலைப்பள்ளி, புளியடி மாரியம்மன் இந்து மேல்நிலைப்பள்ளி, புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி, ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆவே மரியா மெட்ரிக் பள்ளி, மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நானூறுக்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்திய வண்ணம் ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலத்தில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் நாககுமாரி, வருவாய் ஆய்வாளர் பிரஷ்யா நிறையா, தனி வருவாய் ஆய்வாளர் முத்துராமன், சாத்தான்குளம் விஏஓ சுபாஷ், வருவாய் உதவியாளர் சுதர்சன், ஆசிரியர்கள் செல்வசேகர், கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி கோட்ட கலால் துறையினர் செய்திருந்தனர்.