வழிமறித்து தகராறு: அரிவாளால் தாக்க முயன்றவர் கைது!

84பார்த்தது
வழிமறித்து தகராறு: அரிவாளால் தாக்க முயன்றவர் கைது!
ஸ்ரீவைகுண்டம் அருகே வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் இன்னோஸ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, செந்திலம் பண்ணை பேருந்து நிறுத்தம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் செல்வவிநாயகம் (46) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து அவரிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே போலீசார் செல்வவிநாயகத்தை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி