சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்!

68பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் அடையாளம் தெரியாத தலைமறைவான குற்றவாளிகளை துரித விசாரணை மூலம் கண்டறிந்து கைது செய்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை, சேரகுளம் காவல் நிலைய தலைமை காவலர்கள் வேம்புராஜ், சுப்பிரமணியன், ஏரல் காவல் நிலைய முதல் நிலை காவலர் ஜான் அந்தோணி ராஜ், சேரகுளம் காவல் நிலைய காவலர் பட்டவராயன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

குலசேகரப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கின் எதிரியை சம்பவம் நடைபெற்ற 3 மணி நேரத்திற்குள் கைது செய்த குலசேகரப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ரகுராஜன், சிறப்பு சார்பு ஆய்வாளர் அமிர்த எபினேசர், தலைமை காவலர்கள் பாலகிருஷ்ணன், முருகன், அருள்ஜோதி ஆகியோரின் பணியை எஸ் பி பாலாஜி சரவணன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி