ஏரல் ஆடி அமாவாசை திருவிழா, வரும் 20ஆம் தேதி கொடியேற்றம்

75பார்த்தது
ஏரல் ஆடி அமாவாசை திருவிழா, வரும் 20ஆம் தேதி கொடியேற்றம்
ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாச்சல சுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா, வரும் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பன்னிரண்டு நாள்கள் நடைபெறும் திருவிழாவில், 9ஆம் திருநாள் வரை தினசரி காலை சோ்ம விநாயகர் உலாவும், இரவில் பல்வேறு கோலங்களில் சுவாமி உலாவும் நடைபெறும். வருகிற 29ஆம் தேதி புதன்கிழமை 10ஆம் திருநாளன்று தை அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. 

அன்று மதியம் சுவாமி உருகு பலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி, அபிஷேக ஆராதனை, மாலை இலாமிச்சவோ் சப்பரத்தில் சோ்ம திருக்கோல பவனி, இரவு 1ஆம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளல் ஆகியவை நடைபெறுகின்றன. 11ஆம் திருநாளான 30ஆம் தேதி அதிகாலை 2ஆம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 3ஆம் காலம் பச்சை சாத்தி தரிசனம் ஆகியவை நடைபெறுகின்றன. 

மாலையில் ஏரல் அருள்மிகு சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாக சாந்தி, இரவு சுவாமி திருக்கோயில் மூஸ்தானம் வந்துசேரும் ஆனந்தக் காட்சி ஆகியவை நடைபெறும். நிறைவு நாளான 12ஆம் திருநாள் 31ஆம் தேதி காலை தீர்த்தவாரி, பொருநை நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடலும், மதியம் அன்னதானமும் மாலையில் ஆலிலை சயன அலங்காரமும், அதன் பின்னர் ஊஞ்சல் சேவையும் நடைபெறுகிறது. இரவில் திருவருள் புரியும் மங்கள தரிசனம் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி