தூத்துக்குடி: மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி

80பார்த்தது
தூத்துக்குடி: மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி
தூத்துக்குடி அருகே, செங்கல் சூளையில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தியிலிருந்து தண்ணீர்த்து செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இந்த செங்கல் சூளையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். 

காலை 8 மணிக்கு இந்த சூளைக்கு மின்சாரம் வரக்கூடிய ஒயர் கட்டப்பட்டு இருந்த மரம் கீழே விழுந்துள்ளது. இதில் ஒயரும் அறுந்து சூளைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த இரும்பு கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்ததில் உத்தரப்பிரதேச மாநிலம் பகராஸ் மாவட்டத்தை சேர்ந்த ராஜோமகன் சல்மான் (32), முகமது சமீர் (27), திலீப் குமார் (27), ராகேஷ் (27) ஆகிய 4 பேர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர்.

இதில் ராஜாமகன் சல்மான் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து போனார். மேலும், மற்ற 3 தொழிலாளர்களும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியதில் பலத்த காயங்களுடன் கிடந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சாயர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி