டிராக்டர் மீது பைக் மோதி விபத்து: வாலிபர் பலி!

59பார்த்தது
டிராக்டர் மீது பைக் மோதி விபத்து: வாலிபர் பலி!
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மோசஸ் தெருவை சேர்ந்தவர் ஜெகன்நாதன் மகன் ஸ்ரீமனோரஞ்சித் (20). சாத்தான்குளத்தில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை - நாசரேத் சாலையில் அங்குள்ள சாய்பாபா கோயில் அருகே சாலையில் பழுதாகி நின்ற டிராக்டர் மீது பைக் மோதியதில் பலத்த காயமடைந்த ஸ்ரீமனோரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாத்தான்குளம் அருகே வடலிவிளை வடக்கு தெருவை சேர்ந்த பொன்பாண்டி மகன் சக்திவேல் (36). சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். வியாபாரம் முடிந்து இரவு பன்னம்பாறை வழியாக பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஸ்ரீமனோ ரஞ்சித் மோதிய அதே டிராக்டர் மீது இவரது பைக்கும் மோதியது.

இதில் சக்திவேல் பலத்த காயம் அடைந்தார். சாத்தான்குளம் போலீஸார் சம்பவ இடம் சென்று, ஸ்ரீமனோரஞ்சித் சடலத்தை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த சக்திவேல், திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி