பேய்க்குளம் அருகே வெறி நாய்கள் கடித்து குதறியதில் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.
தூத்துக்குடி மாவட்டம், வடக்கு பேய்க்குளம் கிருஷ்ணன் கோயில் பகுதியைச் சோ்ந்த பிச்சையா மகன் இசக்கிமுத்து (40), பெட்டைகுளம் பகுதியைச் சோ்ந்த இசக்கிமுத்து ஆகியோா் கள்ளியடைப்பு பகுதியில் ஆட்டுக்கிடை அமைத்து சுற்றி முள்வேலியிட்டு பராமரித்து வந்தனா். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஆட்டுக்கிடைக்குள் புகுந்த வெறிநாய்கள் ஆட்டுக்குட்டிகள் மற்றும் ஆடுகளை கடித்து குதறினவாம்.
இதில், 25 குட்டிகள் இறந்தன. 2 குட்டிகளை காணவில்லையாம். இதேபோல இசக்கிமுத்து அமைத்திருந்த ஆட்டுக்கிடையில் 4 குட்டிகள் இறந்து கிடந்தனவாம். இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனா். மேலும், தமிழக அரசு பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு தர வேண்டும், வெறி நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.