தூத்துக்குடி: போதைப்பொருள் குறித்து புகார் அளிக்க கைபேசி செயலி

55பார்த்தது
தூத்துக்குடி: போதைப்பொருள் குறித்து புகார் அளிக்க கைபேசி செயலி
மாணவர்களிடையே ஏதேனும் போதைப்பொருள் பயன்பாடு தெரியவந்தால் மாணவர்கள் கைபேசி செயலி வழியாக புகார் அளிக்கலாம் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவதி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று (27.03.2025) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே 'போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு' என்ற நிலையை உருவாக்குவதற்காக போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் நடமாட்டம் குறித்து தங்களுடைய சுயவிவரங்கள் இன்றி புகார் செய்வதற்கு 'DRUG FREE TN' என்ற கைபேசி செயலி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவதி தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி