தூத்துக்குடி ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி வளாகத்தில் மகளிர் மேம்பாட்டு மையத்தின் தலைவர் பேராசிரியை நீதா மற்றும் சாலை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பேராசிரியை அனிஸ்டா தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியை நீதா வரவேற்புரை வழங்கினார். ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் முதல்வர் சுப்புலட்சுமி (பொறுப்பு) வாழ்த்துரை வழங்கினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கமாண்டோ படை பிரிவு காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் மாணவிகளிடையே பேசியதாவது; நாட்டில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கெல்லாம் காரணம் பெண்களாகிய நீங்கள் தான். ஒரு பெண் ஒரு பெண்ணிற்கு தாயாக இருக்கும் போது அந்த பெண்ணிற்கு நன்மைகளையே செய்கிறாள்.
தற்போது சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிரான பதிவுகள் அதிகமாக வெளியிடப்படுகின்றத பெண்கள் தங்களது படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அதற்கு வரும் பாராட்டுகளை எண்ணி சந்தோசம் அடைகின்றனர். ஆனால் இதனால் வரும் தங்களுக்கு எதிரான கொடுமைகளை அறியாமல் பெண்கள் தங்களது படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.
சில சமூக விரோதிகள் தங்களுக்கு அதனை சாதகமாக பயன்படுத்தி அந்த பெண்களின் புகைப்படங்களை மாற்றி அமைத்து அதனை அந்தப் பெண்களிடம் காட்டி மிரட்டி வருகின்றனர்.