கடன் பிரச்சனையால் பெண் தற்கொலை!

82பார்த்தது
கடன் பிரச்சனையால் பெண் தற்கொலை!
எப்போதும்வென்றான் அருகே கடன் பிரச்சனையால் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகேயுள்ள காட்டுநாயக்கன்பட்டி சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து மனைவி மயிலாம்மாள் (38). இவர் வீடு கட்ட கடன் வாங்கினாராம். அதன் பின்னர் கடனை திருப்பி செலுத்த முடியவில்லையாம்.

கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதில் மனமுடைந்த மயிலம்மாள் நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி