தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் க. இளம்பகவத் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தேசிய அறக்கட்டளை உள்ளுர் குழுவின் மூலம் 7 நபர்களுக்கு பாதுகாவலர் நியமனசான்றினையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ. 49, 600/- மதிப்பீட்டில் செயற்கைகாலினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ. 26, 705/- மதிப்பீட்டில் விலையில்லா தேய்ப்புப் பெட்டிகளையும், 5 பயனாளிகளுக்கு ரூ. 28, 168/- மதிப்பீட்டில் மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்களையும் மேலும், தாட்கோ சார்பில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் மூலமாக வழங்கப்படும் பணியிட விபத்து மரண உதவித்தொகை ரூ. 5 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் பயனாளியிடம் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச. அஜய் சீனிவாசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.