மெஞ்ஞானபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 69 பயனாளிகளுக்கு ரூ. 22. 74 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்டஆட்சியர் கோ. லட்சுமிபதி, வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ஊராட்சி ஒன்றியம் மெஞ்ஞானபுரம் கிராமத்தில் இன்று (10. 07. 2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் 60 பயனாளிகளுக்கு பட்டாக்களையும், 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் திருமண உதவித்தொகை மற்றும் நிவாரணத்தொகை ரூ. 77500 பெறுவதற்கான ஆணையினையும், வேளாண்மைத்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் / மாநில வேளாண் வளர்ச்சித்திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ. 2905 மதிப்பில் இடுபொருட்களையும்,
மாவட்ட தொழில் மையம் மூலம் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க 1 பயனாளிக்கு ரூ. 5. 48 இலட்சம் மானியத்துடன் ரூ. 21. 94 லட்சம் மதிப்பில் கடனுதவியையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் 1 பயனாளிக்கு தர்பூசணி விதைகள் மற்றும் இடுபொருள் என மொத்தம் 69 பயனாளிகளுக்;கு ரூ. 22, 74, 405 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி, வழங்கினார்.