சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தம்!

74பார்த்தது
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து தடை உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி நேற்று காலை 8 மணி முதல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக லாரி உரிமையாளர்கள் லாரி ஓட்டுநர்கள் வழக்கறிஞர் உள்ளிட்டோர் சுங்கச்சாவடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர் மேலும் சுங்கச்சாவடியில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் போராட்டத்தில் விடுபட்டவர்களுடன் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்
இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தங்கள் வாக்குறுதி நகலை அளித்தனர்


இதைத்தொடர்ந்து நேற்று இரவு மதுரை உயர்நீதிமன்ற கிளை புது பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் தங்க கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவிட்ட நகலை வழக்கு தாக்கல் செய்த நபர் மற்றும் வழக்கறிஞர்கள் லாரி உரிமையாளர்கள் சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் அளித்தனர்


இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் கட்டன வசூல் நிறுத்தப்பட்டு வாகனங்கள் அனைத்தும் கட்டணம் இல்லாமல் செல்கின்றன

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி