தூத்துக்குடி: புகையிலை பொருட்கள், மதுபான பாட்டில்கள் பறிமுதல்.. ஒருவர் கைது

57பார்த்தது
தூத்துக்குடி: புகையிலை பொருட்கள், மதுபான பாட்டில்கள் பறிமுதல்.. ஒருவர் கைது
தூத்துக்குடியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபான பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். 37 கிலோ புகையிலை பொருட்கள், 29 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி தூத்துக்குடி ஊராட்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலையத்தின் ஆய்வாளர் சைரஸ் தலைமையில் சார்பு ஆய்வாளர் சுப்புராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடத்தூர் தெற்கு தெருவில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் அதே பகுதியைச் சேர்ந்த மாடதங்கம் மகன் ராஜவேல் (54) என்பதும் தனது வீட்டில் சட்டவிரோதமாக விற்பனைக்காக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. 

உடனே போலீசார் ராஜவேலை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.25,000 மதிப்புள்ள 37 கிலோ 800 கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் 29 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி