தமிழக முதல்வர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் முதல்வர் மருந்தகம் திறந்தார். இந்த மருந்தகத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லும் வகையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (17.03.2025) கூட்டுறவுத்துறையின் மூலம் இயங்கும் முதல்வர் மருந்தகம் தொடர்பான துண்டு பிரச்சுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், வெளியிட்டார்.