பைக் திருடிய வாலிபர் கைது: 6 இருசக்கர வாகனங்கள் மீட்பு

1083பார்த்தது
பைக் திருடிய வாலிபர் கைது: 6 இருசக்கர வாகனங்கள் மீட்பு
தூத்துக்குடியில் கடந்த 16. 02. 2024 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பாலிடெக்னிக் கல்லூரி முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தனிப்படை போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நம்பர் பிளேட் இல்லாமல் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தவரை மேற்படி தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஓட்டப்பிடாரம் சந்தணமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் தங்ககுமார் (22) என்பதும், அவர் மேற்படி பாலிடெக்னிக் கல்லூரி முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை திருடி நம்பர் பிளேட்டை கழட்டி வைத்து ஓட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து தங்ககுமாரை கைது செய்து, அவரிடமிருந்த திருடப்பட்ட ரூ. 2, 07, 000 மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் தனிப்படை போலீசார் தங்ககுமாரிடம் விசாரணை மேற்கொண்டதில் இதுபோன்று ஏற்கனவே 5 இருசக்கர வாகனங்களை தனது நண்பர்களுடன் சேர்ந்து திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் அவரிடமிருந்து பைக் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி