கோடை வெயில் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தூத்துக்குடியில் ஆன்மிக இயக்கம் சார்பில் 2 இடங்களில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
மகளிர் அணி பொறுப்பாளர் யசோதா முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி. ஆர். முருகன் திறந்து வைத்து நீர், மோர், தர்பூசனி மற்றும் பழங்கள் ஆகியவற்றை வழங்கினார். விழாவில், சித்த மருத்துவர் வேம்புகிருஷ்ணன், சிதம்பரநகர் மன்றம் கணேசன், துறைமுகம் பாண்டி, திருவிக நகர் சக்திபீட நிர்வாகிகள் திருஞானம், பத்மா, அனிதா, புதுக்கோட்டை பரமேஸ்வரி, அகிலா, முத்துலெட்சுமி, புவனேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.