தூத்துக்குடி: பொங்கல் விழா..பனை ஓலைகளை வெட்டும் பணி தொடக்கம்

70பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் பலர் தங்கள் வீடுகளின் முற்றத்தில் மண் அடுப்பு வைத்து மண் பானையில் அரிசியிட்டு, பனை ஓலை எரித்து, பொங்கலிட்டும் பாரம்பரிய முறையை கடைப்பிடித்து வழிபாடு செய்து வருகின்றனர். 

இதனை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் பனை மரங்கள் அதிகம் உள்ள அந்தோணியார்புரம் பகுதியில் பனை மரங்களில் இருந்து பனை ஓலைகளை வெட்டும் பணி தொடங்கியுள்ளது. பனை மரத்திலிருந்து வெட்டும் பச்சை ஓலைகள் கீழே விழுந்ததும் அதனை எடுத்து குளத்தின் கரைப்பகுதியில் வெயிலில் காய வைக்கின்றனர். ஓரிரு நாட்களில் ஓலைகள் நன்கு காய்ந்ததும் மொத்தமாக வியாபாரிகளுக்கும் மற்றும் தூத்துக்குடி நகரின் முக்கிய இடங்களில் வைத்து விற்பனை செய்ய தயாராகி வருகிறது.

தொடர்புடைய செய்தி