தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் குடிநீர் சாலை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கேட்டு மக்கள் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் துறைவாரியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.