தூத்துக்குடி: கரிநாள் இறைச்சி கடைகளில் இறைச்சிகளை வாங்க மக்கள் கூட்டம்!

85பார்த்தது
தூத்துக்குடி பொங்கலுக்கு அடுத்த நாளான இன்று கரிநாள் என்பதால் இறைச்சி கடைகளில் இறைச்சிகளை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம் பொங்கலுக்கு அடுத்த நாள் கரிநாள் என்பதால் அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு அடுத்த நாள் அசைவ உணவுகளை உண்பர் 

இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை இறைச்சி கடைகளில் இறைச்சிகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது தூத்துக்குடி வ உ சி சந்தையில் உள்ள இறைச்சி கடைகள் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் இறைச்சிகளை வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர் 

பிராய்லர் சிக்கன் கிலோ 200 முதல் 240 வரையும் நாட்டுக்கோழி கிலோ 500 ரூபாய் வரையும் மட்டன் தனிக்கறி கிலோ 1100 ரூபாய் வரையும் எலும்புக்கறி கிலோ ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது

தொடர்புடைய செய்தி