தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நடைபயிற்சி நண்பர்கள் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் பாளை ரோட்டில் அமைந்துள்ள ராஜாஜி பூங்காவில் நடைபயிற்சி நண்பர்கள் சார்பில் 2025 புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. மூத்தவர்கள் செல்வராஜ் நடராஜன் புத்தாண்டு கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு இலவச சேலைகள் வழங்கி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார். விழாவில், நடைப்பயிற்சி நண்பர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டு புத்தாண்டு தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.