குடிநீர் கேட்டு இஸ்லாமிய பெண்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

53பார்த்தது
தூத்துக்குடி ஜாகிர் உசேன் நகர் பகுதி இஸ்லாமியப் பெண்கள் மற்றும் சமத்துவபுரம் பகுதி மக்கள் குடிநீர் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

தூத்துக்குடி மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஜாகிர் உசேன் நகர் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கப்படாததால் அந்தப் பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் குடிநீரை குடம் பத்து ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது இது தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

இது தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஜாகிர் உசேன் நகர் பகுதியில் சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்

இதேபோன்று தூத்துக்குடி தரவைக்குளம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படாததால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர் எனவே சமத்துவபுரம் பகுதிக்கு தனி குடிநீர் பைப் லைன் அமைத்து குடிநீர் பிரச்சனையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கிராம மக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி