ஊதியச் சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம்: ஆணையரிடம் கோரிக்கை

81பார்த்தது
ஊதியச் சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம்: ஆணையரிடம் கோரிக்கை
உள்ளாட்சி அமைப்புகளில் குறைந்தபட்ச ஊதியச் சட்டப்படி ஊதியம் வழங்க தக்க நடவடிக்கை எடுக்க கோரி தொழிலாளர் நலஆணையரிடம் ஏஐடியுசி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம ஊராட்சி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்து 12, 625 ஊராட்சிகளிலும் குறைந்தபட்ச ஊதிய அமலாக்க அதிகாரிகள் ஆய்வு செய்து குறைந்த பட்ச ஊதியத்திற்கும் குறையாத ஊதியம் அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்ட நாளில் இருந்து நிலுவைத் தொகையுடன், ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி சங்கம் சார்பாக தூத்துக்குடி தொழிலாளர் நல ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஏஐடியுசி மாவட்டத்தலைவர் கிருஷ்ணராஜ் தலைமையில், மாவட்ட செயலாளர் லோகநாதன் முன்னிலையில் நிர்வாகிகள் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆணையர் அவர்கள் அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். நிகழ்ச்சியில் பாலசிங்கம், சேது, தனலெட்சுமி, ஞானசேகர், மனோன்மணி, கே. பி. முருகன், அசோகன், ரவி, தாமரைசெல்வன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி