தூத்துக்குடி மாநகராட்சி - அம்பேத்கர் நகரில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 29 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள புதிய ஸ்டெம் பூங்கா திறப்பு விழாவிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். இதில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்கள் மற்றும் கழக பாராளுமன்ற குழு துணைத் தலைவர் திருமிகு. கனிமொழி கருணாநிதி திறந்துவைத்த நிகழ்வில் இன்று மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. கீதாஜீவன் எம்எல்ஏ. , அவர்கள் கலந்து கொண்டபோது.
உடன் மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் திரு. செந்தில்ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் திரு. தாக்கரே சுபம் ஞானதேவராவ், மாநகராட்சி ஆணையர் திரு. தினேஷ்குமார், வட்ட செயலாளர் வழக்கறிஞர் சதீஷ்குமார் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திருமதி. பிரம்மசக்தி மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.