மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கிட்டு தற்கொலை!

561பார்த்தது
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கிட்டு தற்கொலை!
தூத்துக்குடியில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி சிலுவைபட்டி கணபதி நகரைச் சேர்ந்தவர் கோட்டைச்சாமி மகன் ஆசைத்தம்பி (45). வெல்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் மது குடித்துவிட்டு வந்ததால் அவரது மனைவி சந்தனமாரி கண்டித்துள்ளார்.

இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஆசைத்தம்பி நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி