தூத்துக்குடி: ஆஞ்சநேயர் கோயில் அனுமன் ஜெயந்தி விழா; பக்தர்கள் சாமி தரிசனம்

57பார்த்தது
தூத்துக்குடி: ஆஞ்சநேயர் கோயில் அனுமன் ஜெயந்தி விழா; பக்தர்கள் சாமி தரிசனம்
தூத்துக்குடி அருகே தெய்வச்செயல்புரத்தில் உள்ள விசுவரூப சுந்தர வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் தெய்வச்செயல்புரத்தில் விசுவரூப சுந்தர வரத ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 77 அடி உயர விசுவரூப ஆஞ்சநேயர் கம்பீரமாக பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆஞ்சநேயருக்கு தனிச்சிறப்பு உண்டு. இலங்கையில் ராவணனின் பிடியில் இருந்து சீதையை மீட்பதற்காக ராமர் படையெடுத்து சென்றார். 

அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் பஞ்சசுத்த ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், ஆஞ்சநேயர் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று விசுவரூப ஆஞ்சநேயருக்கு துளசி மாலை, வடை மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. கோவிலில் நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் அனுமனை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு வடை, துளசி உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ராஜேசுவரி, பொருளாளர் சண்முகசுந்தரம், அர்ச்சகர் சீனிவாசன் பட்டர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி