தூத்துக்குடி: முதியவர் தூக்கு போட்டு தற்கொலை

74பார்த்தது
தூத்துக்குடி: முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் பராமரிக்க யாரும் இல்லாததால் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் போத்தி மகன் மோகன் (60), இவரது மனைவி தமிழரசி கடந்த 20 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். 3 மகன்களுக்கும் திருமணம் ஆகி தனியே வசித்து வருகின்றனர். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட மோகன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்டு தன்னை யாரும் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என மன வேதனையில் இருந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

தொடர்புடைய செய்தி