தூத்துக்குடி அருகே காவல் உதவி ஆய்வாளர் மனைவியிடம் தகராறு செய்த வழக்கில் காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை தென்றல் நகரை சேர்ந்தவர் காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ்குமார். இவரது மனைவி பிரியதர்ஷினி(28). இவர் சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை அழகுராம் நகர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த பசுவந்தனை காவலர் பிரான்சிஸ் சேவியர், பிரியதர்ஷினியை வழிமறித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் விசாரித்து வந்த நிலையில், பிரான்சிஸ் சேவியரை தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.