தூத்துக்குடி மாவட்டம் கீழ முடிமன் கிராமத்தில் பாதையை ஆக்கிரமித்து தனி நபர்கள் வீடுகளை கட்டி உள்ளதால் 12 அடி பாதை இரண்டடி பாதையாக மாறி உள்ளதால் பாதிக்கப்பட்ட தெற்கு காலனி பகுதியை சேர்ந்த மக்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
தூத்துக்குடி மாவட்டம் கீழ முடிமன் கிராமத்தில் தெற்கு காலனி பகுதியில் அரசு ஆவணத்தில் பாதையாக உள்ள இடத்தை ஆக்கிரமித்து சில தனி நபர்கள் தொடர்ச்சியாக வீடுகளை கட்டி வருவதால் தெற்கு காலனி பகுதி மக்களுக்கு 12 அடி பாதை தற்போது இரண்டடி பாதையாக மாறி உள்ளது. இதன் காரணமாக கிராம மக்கள் தங்கள் தெரு பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பள்ளி குழந்தைகள் பள்ளி செல்ல முடியாத நிலையும் உருவாகியுள்ளது. தங்கள் தெரு பகுதியில் கழிவு நீரை ஆக்கிரமிப்பாளர்கள் விட்டு வருவதால் நோய் தொற்று ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அரசு பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட தெற்கு காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.