கண் தானம் செய்த நபர்களின் குடும்பத்தினரை கௌரவித்த ஆட்சியர்!

74பார்த்தது
கண் தானம் செய்த நபர்களின் குடும்பத்தினரை கௌரவித்த ஆட்சியர்!
39-வது தேசிய கண் தான இரு வார விழாவினை முன்னிட்டு கண் தானம் செய்த நபர்களின் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் கௌரவித்தார்.

தூத்துக்குடி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று(செப்.4) மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கண் வங்கி, இணைந்து நடத்திய 39-வது தேசிய கண் தான இரு வார விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் கண் தானம் செய்த நபர்களின் குடும்பத்திற்க்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவிதத்தாவது: பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தூத்துக்குடி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண் வங்கி இணைந்து நடத்தும் 39-வது தேசிய கண் தான இரு வார விழாவிற்கு முன்னிலை வகிக்ககூடிய இந்த மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் கு. சிவகுமார் அவர்களே, இங்கு வருகை புரிந்து விழாவை கவனித்து வரக்கூடிய மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ஆர். பத்மநாதன் அவர்களே, துணை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் பி. குமரன் அவர்களே, இந்த கண்தான விழிப்புணர்வு நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி