சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்:

166பார்த்தது
சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் நாலாட்டின்புதூர் காவல் நிலைய திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகள் மற்றும் 6 கண்ணக்களவு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 1 எதிரி ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ. 6, 85, 000 மதிப்பிலான 17 பவுன் தங்க நகைகள் மற்றும் வீடியோ கேமரா ஆகியவற்றை மீட்;ட கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர், உதவி ஆய்வாளர் காந்தி, நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில், கயத்தாறு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் நாராயணசாமி, தலைமை காவலர் முருகன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலை முதல் நிலை காவலர் சுரேஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

காவல் ஆய்வாளர்கள் உட்பட 38 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின்போது தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி