தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே அயிரவன்பட்டியில் கோவில் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியை அயிரவன்பட்டி தொழிலதிபர் முருகேச பாண்டியன், துவங்கி வைத்தார். சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகள்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே அயிரவன்பட்டியில்
ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஏற்பாட்டின் பேரில் பூஞ்சிட்டு மாட்டு வண்டி எல்கைபந்தயம் இரு பிரிவாக நடைபெற்றது. இந்த மாட்டு வண்டி போட்டியில் 40க்கும் மேற்ப்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன ஆயிரவன்பட்டி முதல் கடம்பூர் சாலை வரை நடைபெற்ற
இந்த மாட்டு வண்டி போட்டிகளை அயிரவன்பட்டி தொழிலதிபர் முருகேச பாண்டியன், ஓட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன
இதைத்தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளருக்கும் சாரதிகளுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கினார்கள் இந்த மாட்டு வண்டி போட்டிகளை சாலையில் ஓரத்தில் நின்ற பொதுமக்கள் பார்வையிட்டு மாட்டு வண்டி ஓட்டக்கூடிய சாரதிகளை உற்சாகப்படுத்தினார்கள்