போதைப் பொருள் தடுப்பது தொடா்பான விழிப்புணா்வு

58பார்த்தது
போதைப் பொருள் தடுப்பது தொடா்பான விழிப்புணா்வு
தூத்துக்குடியில் போதைப் பொருள் தடுப்பது தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல்துறை, பேரிடா் மேலாண்மை அறக்கட்டளை, தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் தூத்துக்குடி அரசு ஐடிஐ வளாகத்தில் இப் பேரணி நடைபெற்றது. ஐடிஐ முதல்வா் வா. வேல்முருகன் தலைமை வகித்தாா். பேரணியை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி ஏ. செந்தில் இளந்திரையன் தொடங்கி வைத்தாா். கோரம்பள்ளம் ஊராட் அலுவலகம், இந்திராநகா் நான்கு தெருக்களின் வழியாக சென்று மீண்டும் ஐடிஐ-யை சென்றடைந்தது.

இப்பேரணியில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆய்வாளா் டி. முத்துமாலை, அய்யனடைப்பு முன்னாள் ஊராட்சித் தலைவா் ஆ. ஆதிநாராயணன், நியூ பாசக்கரங்கள் முதியோா் இல்ல இயக்குநா் அ. முத்துப்பாண்டியன், துளசி சோஷியல் டிரஸ்ட் இயக்குநா் எஸ். தனலெட்சுமி, தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனா்- தலைவா் எம். ஏ. தாமோதரன், தொழிற்பயிற்சி நிலைய உதவி இயக்குா் ஏஞ்சல், மாணவா்-மாணவிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி