ஆயுதப்படை காவல்துறையினரின் உடற்பயிற்சி: எஸ்பி ஆய்வு!

81பார்த்தது
ஆயுதப்படை காவல்துறையினரின் உடற்பயிற்சி: எஸ்பி ஆய்வு!
தூத்துக்குடியில் ஆயுதப்படை காவல்துறையினரின் உடற்பயிற்சியை எஸ்பி பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி நகர உட்கோட்டம் மற்றும் ஆயுதப்படை போலீசாரின் உடற்பயிற்சி இன்று காலை வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்து, காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.

பின்னர் போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வின் போது ஆயுதப்படை காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பேச்சிமுத்து, சார்பு ஆய்வாளர்கள் நங்கையர்மூர்த்தி, பரமேஸ்வரி உட்பட ஆயுதப்படை போலீசார் மற்றும் தூத்துக்குடி நகர உட்கோட்ட போலீசார் ஆகியோர் உடனிருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி