தூத்துக்குடி: மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

77பார்த்தது
தூத்துக்குடி: மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் மின்னணு முறையில் வரவேற்கப்படுகின்றன. 

இந்திய அரசின், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2025-26 ஆம் நிதி ஆண்டில், ரூபாய் 1000/- முதல் ரூபாய் 25000/- வரை, கல்வி உதவித் தொகை பெறுவதற்காக, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

வகுப்பு ஒன்று முதல் பத்து வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31/08/2025. மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31/10/2025. மேற்கொண்டு விளக்கங்கள் மற்றும் உதவி பெறுவதற்கு மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், வி.க. தொழில் பூங்கா கிண்டி, சென்னை – 600032. மின்னஞ்சல் – wclwo.chn-mole@gov.in தொலைபேசி எண்: 044-29530169 அணுகலாம் என தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மத்திய நல ஆணையர் கே.ஏ. செபாஸ்டியன் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி