தூத்துக்குடியில் பா. ஜனதா கட்சி நிர்வாகியை தாக்கியதாக 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி கணேசன் காலனியை சேர்ந்தவர் பிரபு (42). பா. ஜனதா கட்சி நிர்வாகியான இவருக்கும் பக்கத்து வீட்டில் இருந்த தங்கராஜ் என்பவருக்கும், வீட்டின் முன்பு கூலிங் சீட் அமைப்பது தொடர்பாக, பிரச்சினை இருந்து உள்ளது. சம்பவத்தன்று பிரபு கணேசன் காலனி பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் வழிமறித்து தாக்கி உள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தார். அப்போது, தூத்துக்குடி சாந்திநகரை சேர்ந்த லாரி டிரைவர் மாரிமுத்து (32), பிரையண்ட் நகரை சேர்ந்த லாரி டிரைவர் பாலமுருகன் (25) ஆகிய 2 பேரும் தாக்கியது தெரியவந்தது. உடனடியாக போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.