தூத்துக்குடி: அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பார்வையாளர் ஆலோசனை!
தூத்துக்குடி மாவட்டத்தில் 01.01.2025-ஐ தகுதிநாளாக கொண்டு நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள், 2025-ஐ ஆய்வு செய்திட இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மு. விவேகானந்தன், மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்புற நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை புரிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டு, அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை மற்றும் கருத்துக்கள் கேட்கப்பட்டன. அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து, முடிவு செய்திட, வாக்காளர் பட்டியல் பார்வையாளரால் தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதியான வாக்காளர் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறந்த நபர்களின் பெயர்களை நீக்கம் செய்திடவும், 17 வயது மேற்பட்ட இளம் வாக்காளர்களை சேர்த்திடவும், அனைத்து வாக்காளர்களும் தங்களது ஆதார் எண்களை படிவம் 6பி மூலம் வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும் மேலும், ஆரோக்கியமான வாக்காளர் பட்டியல் வெளியிட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொண்டார்.