தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் காட்டுப்பகுதியில் நேற்று இரவு தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தின் ஆட்டோ ஒன்று பார்சல்களை டெலிவரி செய்ய சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவரின் உத்தரவின் பேரில் காவல்துறை தனிப்படை பிரிவு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் காவலர்கள் செல்லத்துரை, சுரேஷ், அருண், விக்னேஷ் ஆகியோர் அந்த ஆட்டோவை பின் தொடர்ந்து சென்ற போது அந்த ஆட்டோவில் இருந்து இரண்டு பார்சல்கள் கோவில்பட்டி ராஜூவ் நகரை சேர்ந்த பிரான்சிஸ் ஜோஸ் என்பவருக்கு டெலிவரி செய்துள்ளனர். பின் தொடர்ந்து சென்ற போலீசார் அந்த பார்சலை வாங்கி பிரித்து பார்த்தபோது தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து பிரான்சிஸ் ஜோசுவை கைது செய்தனர். இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தனியார் பார்சல் நிறுவனம் மூலமாக தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.