கோவில்பட்டியில் மாநில ஹாக்கி போட்டி; 25 அணிகள் பங்கேற்பு

54பார்த்தது
கோவில்பட்டியில் மாநில ஹாக்கி போட்டி; 25 அணிகள் பங்கேற்பு
கோவில்பட்டியில் மாநில ஹாக்கி போட்டி - சென்னை, பாண்டிச்சேரி, மன்னார்குடி, திண்டுக்கல், கோவில்பட்டி, ராஜபாளையம் அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் பாண்டவர்மங்கலம் ஹாக்கி கிளப் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக முன்னாள் தலைவர் U. அய்யாச்சாமி நினைவு 19 ஆம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் சென்னை, கோவை, நெல்லை, கன்னியாகுமரி, திருப்பூர், விருதுநகர், தேனி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்திலிருந்தும் 25 அணிகள் பங்கேற்றுள்ளன. 

நாக் அவுட் மற்றும் கால் இறுதி, அரை இறுதி, இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன. நேற்று முதல் தொடங்கி நடைபெற்ற நாக் அவுட் போட்டியின் அடிப்படையில் கோவில்பட்டி ஏ எம் சி ஹாக்கி கிளப், பாண்டிச்சேரி ஹாக்கி வாரியர்ஸ், கோவில்பட்டி டாக்டர் அம்பேத்கர் ஹாக்கி கிளப், மன்னார்குடி மண்ணை ஹாக்கி கிளப், ராஜபாளையம் ப்ளூ பாய் ஹாக்கி கிளப், சென்னை பல்கலைக்கழக அணி, திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழக அணி, பாண்டவர்மங்கலம் ஹாக்கி கிளப் ஆகிய 8 அணிகள் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. கால் இறுதி போட்டிகள் நாளை நடைபெறுகின்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி