தூத்துக்குடி: டிஎம்பி வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்கள்

69பார்த்தது
தூத்துக்குடி: டிஎம்பி வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்கள்
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் (ஐடி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் (ஐடி) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஐடி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் எக்ஸிகியூட்டிவ், ஐடி தொழில்நுட்ப நிர்வாகி, சாஃப்ட்வேர் டெவலப்பர், சிஸ்டம்/சர்வர் எக்ஸிகியூட்டிவ், சிபிஎஸ் சப்போர்ட் என்ஜினியர், டேட்டா சயின்டிஸ்ட், தரவு ஆய்வாளர், வணிக அனலிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விபரங்களுக்கு https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_ITSPCL20242502.pdf என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி