கோவில்பட்டி: பைக்கில் புகையிலை பொருட்கள் கடத்தல்.. 2 பேர் கைது

60பார்த்தது
கோவில்பட்டி: பைக்கில் புகையிலை பொருட்கள் கடத்தல்.. 2 பேர் கைது
கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மோட்டார் பைக்கில் விற்பனைக்காக கடத்தி சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையில் போலீசார் கோவில்பட்டி-சாத்தூர் மெயின் ரோட்டில் தனியார் கல்லூரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 2 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றினர். 

இதுகுறித்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கோவில்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரசாந்த் (30) மற்றும் ஊரணி தெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் சிவராம்குமார் (27) என தெரியவந்தது. இதையடுத்து, தனிப்பிரிவு போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் அதிலிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுடன் அந்த 2 வாலிபர்களையும் கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி