சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெரியப்பா கைது!

85பார்த்தது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெரியப்பா கைது!
அருங்குளம் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெரியப்பா போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் உள்ள அருங்குளம் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் கணேசன் (42), இவர் எந்த வேலைக்கு செல்லாமல் ஊருக்குள் ஊதாரியாக சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள தனது மகள் உறவுமுறை கொண்ட 9 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார், இதனை அந்த சிறுமியின் தாய் பலமுறை கணேசனை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த அந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக சைகை காட்டி துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த அந்த சிறுமியின் தாய் கணேசன் மீது விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கணேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில்அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி