புதிய தொழில் முனைவோர் திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு!

57பார்த்தது
புதிய தொழில் முனைவோர் திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு!
தூத்துக்குடியில் புதிய தொழில் முனைவோர் திட்டங்களுக்கான பயனாளிகளை நேர்முகத் தேர்வு செய்வதற்கான மாவட்ட அளவிலான தேர்வுக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS), அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்(க்ஷ ஆகிய திட்டங்களுக்கான பயனாளிகளை நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்வதற்கான மாவட்ட அளவிலான தேர்வுக் குழுக் கூட்டம் ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு மாவட்ட தொழில் மையத்தின் மூலம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடங்குவதற்காக 25% மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் SC/ST பிரிவினர்களுக்கு கூடுதலாக 10% மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக 3% பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.
மேலும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் SC/ST பிரிவினர் புதிதாக தொழில் தொடங்கவும் மற்றும் தொழில் விரிவாக்கத்திற்கும் 35 % மானியத்துடன் கடன் உதவி பெற்று உற்பத்தி, சேவை மற்றும் வியாபார தொழில்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக 6% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி