கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா
ராகு பகவான் மேஷ ராசீயிலிருந்து மீன ராசிக்கும் கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் புரட்டாசி மாதம் 21 ம் தேதி மதியம் 2: 19 மணிக்கு பிரவேசிக்கிறார்கள். இதனையொட்டி
கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் மாலை 6: 00 மணிக்கு கணபதி பூஜை சங்கல்பம் ஸ்தபன கும்பகலச பூஜை யாக சாலையில் கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் மூலமந்திர ஹோமம் பூர்ணாகுதி தீபாராதனை நடைப்பெற்றது. தொடர்ந்து ராகு கேதுவுக்கு மஞ்சள் பால் தேன் பன்னீர் சந்தனம் முதலான 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய ஐயர் செய்தார். இவ்விழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் சசெய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.