பாஜக கொடுத்தது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இல்லை:

392பார்த்தது
பாஜக கொடுத்தது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இல்லை:
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம். பி தலைமையில் திமுக மகளிர் அணி, திமுக மகளிர் தொண்டர், மகளிர் சமூக வலைத்தள அணி புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கனிமொழி எம். பி கலந்து கொண்டு புதிய மகளிர் அணி நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவை சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்றனர்.   இக்கூட்டத்தில், பேசிய கனிமொழி கருணாநிதி எம். பி. "இந்த திருச்சி மண். திராவிட இயக்கம் என்பது பெண்கள் உழைப்பை மதிக்கக் கூடிய, பெண்களின் உரிமைகளுக்காகப் போராடக்கூடிய இயக்கம் தான் திராவிட இயக்கம். மற்ற மாநிலங்களில் வாக்குரிமைக்குப் போராடினார்கள். தமிழ்நாட்டில் எந்த போராட்டம் பண்ணாமல் நமக்கு வாக்குரிமை கொண்டு வந்தது திராவிட இயக்கம். பெண்கள் படிக்க வேண்டும், சொத்துரிமை, உதவி திட்டம் கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி, இதற்கு அடுத்தாற்போல் பெண்கள் உரிமை தொகையை கொண்டு வந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின். பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவீதம் திமுக கொண்டு வந்தார் கலைஞர் கருணாநிதி. அடுத்த தேர்தலில் 50 சதவீத பெண்கள் வெற்றி பெற்றார்கள். என்றார்

தொடர்புடைய செய்தி