மதுரை-தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் கைவிடப்பட்டது

67பார்த்தது
மதுரை-தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் கைவிடப்பட்டது
சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் அமிர்த் பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். 

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் ரயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் வேண்டாம் என தமிழக அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமான கடிதம் வந்தது. இதனையடுத்து தூத்துக்குடி-மதுரை இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணியை மத்திய அரசு முழுவதுமாக கைவிட்டது. 

ஏழை, எளிய மக்களும் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக குறைந்த கட்டணத்தில் அமிர்த் பாரத் ரயில்களை இயக்கப்படுகிறது. இந்த திட்டம் ரயில் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது மேம்படுத்தப்பட்ட படுக்கை வசதி கொண்ட அமிர்த் பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பெட்டிகளில் செல்போன் வைக்கும் பாக்ஸ், நவீன கழிவறை, அவசரகால அழைப்பு உள்ளிட்ட 12 விதமான மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி