தூத்துக்குடி: அதிக ஒலியை எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

61பார்த்தது
தூத்துக்குடி: அதிக ஒலியை எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்
கோவில்பட்டியில் 10 பேருந்துகளில் இருந்து, அதிக ஒலியை எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயாபுரம், கயத்தாறு ஆகிய வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் வாகனங்களில் காற்று ஒலிப்பான்களை அதிகளவு பயன்படுத்துவதால் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், மாசு ஏற்படுவதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜாவுக்கு புகார் வந்ததாம். 

இதையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத், பெலிக்ஸன் மாசிலாமணி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் அண்ணா பேருந்து நிலையத்தில் நேற்று நின்று கொண்டிருந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சிற்றுந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை சோதனை செய்தனர். அப்போது, அதிக ஒலியை எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்திய 10 பேருந்துகளிலிருந்து காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்தனர். அனுமதிக்கப்பட்ட வழிதடத்தை மீறி செயல்படும் சிற்றுந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. சிற்றுந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு மேல் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி